Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்கில் வெளியான சிலமணி நேரங்களில் பைரஸி தளங்களில் கசிந்த ‘கங்குவா’!

vinoth
வெள்ளி, 15 நவம்பர் 2024 (09:55 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘கங்குவா’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸானது. இந்த  படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் இயக்கியுள்ளார். படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

படம் நேற்று ரிலீஸாகி பெரும்பாலும் கலவையான விமர்சனங்களையேப் பெற்று வருகிறது. அதில் படம் பார்த்த எல்லா ரசிகர்களுமே சொல்லும் ஒரே விமர்சனமாக இருப்பது படத்தில் இருக்கும் இரைச்சல்தான். படத்தில் கதாபாத்திரங்கள் எல்லாம் ஹை டெசிபலில் கத்திக் கொண்டிருப்பதாகவும், அதைவிட அதிக சத்தத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை இருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர். மேலும் படத்தின் கதை ரசிகர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான ஒரு உள்ளிழுத்தலை நிகழ்த்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கங்குவா படம் வெளியான சில மணி நேரங்களிலேயே அதன் பைரஸி சில இணையதளங்களில் வெளியாகி பீதியைக் கிளப்பியுள்ளது. இது சம்மந்தமாக ரசிகர்கள் அந்த லின்க்கை குறிப்பிட்டு புகார்களை அனுப்பி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments