Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா ஜான்வி கபூர் இணையும் படம் பற்றி அப்டேட் கொடுத்த போனி கபூர்!

vinoth
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (07:13 IST)
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில்  விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது.

இந்நிலையில் சமீபகாலமாக மும்பையில் அதிகமாக தங்கியிருக்கும் சூர்யா, விரைவில் நேரடி பாலிவுட் படமொன்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் பாலிவுட்  இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மகாபாரத கதையை மையப்படுத்தி உருவாகும் இந்தி படத்தில் சூர்யா கர்ணனாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை இப்போது போனி கபூர் உறுதி செய்துள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் சூர்யாவின் 44 ஆவது படத்தில் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார் எனக் கூறியுள்ளார். சூர்யாவின் 42 ஆவது படமாக கங்குவா படமும், 43 ஆவது படமாக சுதா கொங்கரா இயக்கும் படமும் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments