Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா 44 படம் எப்போது ரிலீஸ்?… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

vinoth
திங்கள், 25 நவம்பர் 2024 (14:55 IST)
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி  மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள கார்த்திக் சுப்பராஜ் “சூர்யா 44 படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகும். படத்தின் ப்ரமோஷன் பணிகள் டிசம்பர் மாதத்தில் இருந்து தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்தடுத்து ட்ராப் ஆகும் படங்கள்… சிபி சக்ரவர்த்திக்கு வந்த சிக்கல்!

‘கார்த்தி 29’ படத்துக்காக பிரம்மாண்டமாக உருவாகும் மீனவ கிராம செட்!

பேரில் இருந்து ‘ஜெயம்’-ஐ எடுத்தாலும் தயாரிப்பு நிறுவனத்துக்கு வைத்த ரவி மோகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments