Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!

vinoth
வெள்ளி, 5 ஜூலை 2024 (08:06 IST)
சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், காஸ்ட்யூம் டிசைனராக ப்ரவீன் ராஜாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். வில்லனாக உறியடி விஜயகுமார் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஷூட்டிங் இந்த மாத தொடக்கத்தில் அந்தமானில் தொடங்கியது. அங்கு இடைவேளையே இல்லாமல் தொடர்ச்சியாக ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் செப்டம்பர் மாதத்திலேயே முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது விறுவிறுப்பாக அங்கு நடந்து வரும் ஷூட்டிங்கில் பிரபல நடிகர்களான ஜோஜு ஜார்ஜ், டாணாக்காரன் இயக்குனர் தமிழ் மற்றும் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு வருகின்றனர். மேலும் ஜிகர்தண்டா 2 வில்லன் நவீன் சந்திராவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தில் அமீர்கான் வரும் காட்சிகள் எத்தனை நிமிடம்?... அவரே வெளியிட்ட தகவல்!

ராமாயணம் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்த விஜய் சேதுபதி!

சூர்யா 45 படத்தின் டீசர் & டைட்டில் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

என்னிடம் எப்போதும் என் தாத்தாவைப் பற்றி மட்டுமே கேட்பார்கள்.. வேறு கேள்வியே இல்லையா –யதீஷ்வரன் ஆதங்கம்!

யுவனுக்கும் எந்த பிரச்சனையுமில்லை… ரசிகர்கள் என்னைத் திட்ட வேண்டாம் – இயக்குனர் ராம் !

அடுத்த கட்டுரையில்
Show comments