சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் படத்தின் தலைப்புக்கு வந்த சிக்கல்… காரணம் அதர்வாவா?

vinoth
வெள்ளி, 29 நவம்பர் 2024 (08:40 IST)
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி  மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்துக்கு “cult” என்ற தலைப்பை வைக்க இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் முயல்கையில், அதே தலைப்பை நடிகர் அதர்வா தான் இயக்கப் போகும் படத்துக்காக ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்துள்ளாராம். இது சம்மந்தமாக சூர்யா 44 பட நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியபோது “எனது கதைக்கு அதுதான் பொருத்தமான தலைப்பு. அதனால் என்னால் அதைக் கொடுக்க முடியாது” எனக் கைவிரித்துவிட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தன்பால் ஈர்ப்பாளர்களை கேவலமாக பேசிய பிக்பாஸ் போட்டியாளர்! வெடித்து சிதறிய மோகன்லால்!

10 நாள் தள்ளிதான் நமக்கு ‘தல’ தீபாவளி… அஜித்தின் அட்டகாசம் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

100 கோடி ரூபாய் வசூலைத் தொட திணறும் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’!

மீனாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘த்ரிஷ்யம் 3’ போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

நான் பார்க்க ஆண் போல இருப்பதாக சொன்னார்கள்… பாடி ஷேமிங் குறித்து மனம் திறந்த தீபிகா படுகோன்!

அடுத்த கட்டுரையில்
Show comments