Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீர தீர சூரன் படத்தில் சிங்கிள் ஷாட்டில் 18 நிமிடக் காட்சி… ரகசியத்தைப் பகிர்ந்த மலையாள நடிகர்!

vinoth
திங்கள், 21 அக்டோபர் 2024 (08:19 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம்மின் சமீபகாலமாக படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான் சமீபத்தில் ரிலீஸாகி குறிப்பிடத்தகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கடுத்து விக்ரம், சமீபத்தில் சித்தா படத்தின் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாரா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மதுரையில் நடந்து வந்த நிலையில் தங்கலான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விக்ரம் வந்ததால் ஷூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில் இப்போது மறுபடியும் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கும் சுராஜ் வெஞ்சரமூடு அளித்துள்ள ஒரு நேர்காணலில் “வீர தீர சூரன் படத்தில் 18 நிமிடக் காட்சியை சிங்கிள் டேக்கில் எடுத்தோம். அதுபோல ஒரு காட்சியில் இதுவரை நான் நடித்ததேயில்லை. அந்த காட்சியில் நான், விக்ரம் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய மூவரும் நடித்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் ஆணையிட்டால்.. எம்ஜிஆர் ஸ்டைலில் செகண்ட் லுக்! - அடுத்தடுத்த அப்டேட்டால் திணறும் ரசிகர்கள்!

மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்: அநாகரிக பேச்சு குறித்து இயக்குநர் மிஷ்கின்..!

எதுவும் திருடு போகல.. ஏதோ கோவத்துல பேசிட்டேன்! - கஞ்சா கருப்பு வழக்கில் திடீர் திருப்பம்!

ஷாருக்கான் வாங்கிய நிலத்தில் வந்த வில்லங்கம்! 9 கோடி ரூபாயை திரும்ப தரும் மகாராஷ்டிரா அரசு!

விஜய்யின் ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் அறிவிப்பு.. மாஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments