Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட் பேட் அக்லி பார்க்க வருபவர்கள் இதை எடுத்துட்டு வாங்க… பில்டப் கொடுக்கும் ஸ்டண்ட் இயக்குனர்!

vinoth
வியாழன், 13 பிப்ரவரி 2025 (08:06 IST)
நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளால் பல தாமதங்களைக் கடந்த வாரம் உலகம் முழுவதும் ரிலீஸானது. அவர் நடித்த ‘துணிவு’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸானது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ‘விடாமுயற்சி’ திரைப்படம் ரிலீஸான நிலையில் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பை அளித்தனர்.

ஆனால் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைந்தது. இதற்குக் காரணம் வழக்கமான மாஸ் மசாலா படமாக இல்லாமல் அஜித் இந்த படத்தில் அடக்கி வாசித்ததுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. படத்தில் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் அம்சங்கள் இல்லை என்பது ஒரு குறையாக சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் அடுத்து அஜித் நடிப்பில் வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வழக்கமான அஜித் மாஸ் மசாலா படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் பணியாற்றியுள்ள ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் பேசும் போது “குட் பேட் அக்லி படம் பார்க்க வரும் ரசிகர்கள் எல்லாம் விக்ஸ் அல்லது ஹால்ஸ் எடுத்துக்கொண்டுதான் வரவேண்டும். ஏனென்றால் படம் முழுக்க கத்தி கத்தி தொண்டை வலியே வந்துவிடும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தலைமறைவான நடிகர் கிருஷ்ணா.. ஒரே நாளில் தனிப்படையிடம் சிக்கி கைது.. தீவிர விசாரணை..!

ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி.. சவுதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை..!

நீ என் படத்தில் நடி.. நான் உன் படத்துல நடிக்கிறேன்.. கார்த்தி - நானி இடையே நட்பு ஒப்பந்தம்?

சினிமாவில் அறிமுகமாகும் தேவயானி மகள்.. தியாகராஜன் - பிரசாந்த் கொடுக்கும் வாய்ப்பு..!

அஜித்தை சந்திக்க துபாய் செல்கிறாரா தனுஷ்? கதை ஓகே ஆனால் எப்போது படப்பிடிப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments