Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் 61 படத்தில் நடிக்கப்போகும் இன்னொரு சூப்பர் ஸ்டார் யார்?

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (09:34 IST)
அஜித் 61 படத்துக்கான கதாபாத்திரத் தேர்வு இப்போது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் திரைக்கதை பணிகள் மற்றும் செட் அமைக்கும் பணிகள் தாமதத்தால் தள்ளி வைக்கப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால், நாகார்ஜுனா உள்ளிட்ட பிறமொழி சூப்பர் ஸ்டார் நடிகர்களோடு பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இதில் மோகன்லால் நடிக்க வாய்பில்லை என்ற நிலையில் நாகார்ஜூனா நடிக்கவே அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஒரு மிகப்பெரிய கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்… இன்று முதல் மீண்டெழுமா?

பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் எங்க கம்பெனிக்குதான் சொன்னார்- கமல் பகிர்ந்த சீக்ரெட்!

மோடி சாதிகளை ஒழிச்சிட்டாரே? ஏன் பிராமணர்களாய் இருக்கீங்க? - ’புலே’ திரைப்பட பிரச்சினையில் இயக்குனர் ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments