Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின்’’வலிமை’’ படத்தின் சூப்பர் அப்டேட்… ''தல'' ரசிகர்கள் கொண்டாட்டம் !

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (21:43 IST)
அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தின் வெளிநாட்டு உரிமை அதிகதொகைக்கு விற்பனையாகியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும் இந்த படத்தின் அப்டேட் கேட்டு கடந்த பல மாதங்களாக ரசிகர்கள் டுவிட்டரில் கோரிக்கை வைத்து வருகின்றனர்

 
ஆனால் ரசிகர்களின் கோரிக்கைக்கு இதுநாள் வரை பதில் இல்லை என்பதும் கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அப்டேட்டும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்கள் தகுந்த நேரத்தில் ’வலிமை’ படத்தின் அப்டேட் வரும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அஜித்தின் வலிமை படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனமான யுனைட்டட் இந்தியா அதிக தொகை கொடுத்துக் கைப்பற்றியுள்ளதாகவும் அஜித்தின் முந்தைய படங்களை விடவும் இப்படம் அதிகவிலைக்குப் போயுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும் அஜித்துடன் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துவரும் இப்படம் கோடையில் வெளிவரும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

அடுத்த கட்டுரையில்
Show comments