Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘லால்சலாம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 9 ஜனவரி 2024 (18:15 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 9 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். 
 
மேலும் ஜீவிதா செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகிய இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மெழுகு சிலை போல வித்தியாசமான உடையில் ரைசா வில்சனின் போட்டோ ஆல்பம்!

கிளாமர் லுக்கில் அசத்தல் போட்டோஷுட் நடத்திய அதிதி ஷங்கர்!

மீண்டும் சினிமாவில் ரி எண்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்… ஜி வி பிரகாஷ் படத்தில் ஒப்பந்தம்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாம் க்ரூஸின் ‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்னது கமல் ரசிகனா?... இரு உன்ன பாத்துக்குறேன் – லோகேஷை மிரட்டிய ரஜினிகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments