ஓ மை கோஸ்ட் படத்தின் ஆடியோ ரிலீஸுக்காக சென்னை வரும் சன்னி லியோன்!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (16:18 IST)
சன்னி லியோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ஓ மை கோஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடக்க உள்ளது.

போர்னோ படங்களில் நடித்து புகழ்பெற்ற சன்னி லியோன் அந்த துறையில் இருந்து விலகி இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன்.  இப்போது தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஏற்கனவே இவர் நடிப்பில் தமிழில் உருவான வீரமாதேவி திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் இப்போது நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் நகைச்சுவை திரில்லர் படமான ஓ மை கோஸ்ட்டில் நடிக்கிறார். இந்த படத்தில் டிக்டாக் பிரபலம் ஜி பி முத்துவும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடக்க உள்ளது. இதற்காக சன்னி லியோன் சென்னைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்