Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன்னி லியோன் மீது தமிழ் ரசிகர்கள் அதிருப்தி: பீட்டா விளம்பரத்தில் கவர்ச்சி!

சன்னி லியோன் மீது தமிழ் ரசிகர்கள் அதிருப்தி: பீட்டா விளம்பரத்தில் கவர்ச்சி!

Webdunia
சனி, 3 ஜூன் 2017 (13:09 IST)
ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டபோது தமிழர்களால் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது பீட்டா அமைப்பு. அந்த அமைப்பில் தூதுவர்களாகவும், உறுப்பினர்களாகவும் இருந்த நடிகர் நடிகளையும் விட்டு வைக்கவில்லை தமிழர்கள்.


 


அந்த அளவுக்கு தமிழர்களுக்கு பிடிக்காத ஒரு அமைப்பாக பீட்டா அமைப்பு இருந்தது. பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர் நமது தற்கால வீரத்தமிழர்கள்.
 
அதே நேரத்தில் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு இதியா முழுவதும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழகத்திலும் சன்னிலியோனுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை சன்னி லியோன் பீட்டாவின் விளம்பரம் ஒன்றில் நடத்துள்ளது அவரது தமிழ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 
பீட்டாவின் புகைப்பட விளம்பரத்துக்கு போஸ் கொடுத்த கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தனது அந்தரங்க உறுப்புக்களை மட்டும் சிவப்பு நிற துணியால் மறைத்து மிளகாய்கள் மேல் படுத்திருப்பது போல் உள்ளது அந்த புகைப்படம். அதில் உங்கள் வாழ்க்கையை உற்சாகமாக்கிடுங்கள்! சைவ உணவாளராக மாறுங்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
 
பீட்டா அமைப்பால் 2016-ஆம் ஆண்டு நபராக சன்னி லியோன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து, அதன் பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்