Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நன்றாக திட்டுங்கள் பழகிவிட்டது… இயக்குனர் சுந்தர் சி கருத்து!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (15:47 IST)
இயக்குனர் சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 3 படம் அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.

அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் ’அரண்மனை 3’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த படம் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுந்தர்சி,ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகிபாபு, குஷ்பூ, கோவை சரளா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். செந்தில்குமார் ஒளிப்பதிவில் ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை குஷ்பு மற்றும் சுந்தர் சி தயாரித்து உள்ளனர்.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சுந்தர் சி பேசியபோது ‘நான் சாதாரணமான கலைஞன். என் படத்தை பார்க்க வருபவர்களை சந்தோஷப்படுத்தி அனுப்ப வேண்டும் என நினைப்பவன். என்னிடம் புதிய கதையோ, புரட்சிகரமான விஷயங்களோ இல்லை. விமர்சனங்களில் நன்றாக திட்டுங்கள். அது பழகிவிட்டது. ஆனால் கதையை மட்டும் சொல்லாதீர்கள்’ எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments