Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் படங்களில் ஆபாசக் காட்சிகள், இரட்டை அர்த்த வசனம் இருக்காது- அப்பட்டமாக புளுகிய சுந்தர் சி!

vinoth
திங்கள், 21 ஏப்ரல் 2025 (10:52 IST)
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் சுந்தர் சி ஒரு வெற்றிகரமான இயக்குனராக உள்ளார். கால மாற்றத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வதுதான், அவருடைய வெற்றிக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருந்த மத கஜ ராஜா ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அவர்  இயக்கிய ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 24 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து அவர் படத்தின் ப்ரமோஷனுக்காக பல நேர்காணல்களைக் கொடுத்து வருகிறார்.

அதில் ஒரு நேர்காணலில் “என் படங்களில் கதாநாயகிகள் கிளாமராக வருவார்கள். ஆனால் அவர்களை ஆபாசமாகக் காட்டும் ஆங்கிள்களில் நான் கேமரா வைக்க மாட்டேன். சேலையில் வந்தாலும் நான் டாப் ஆங்கிள் வைக்க மாட்டேன். அதேபோல மாடர்ன் உடையில் வரும் போது லோ ஆங்கிளும் வைக்க மாட்டேன். அதே போல இரட்டை அர்த்த வசனங்களும் இருக்காது” எனக் கூறியிருந்தார்.

ஆனால் சுந்தர் சி எதையெல்லாம் தன் படங்களில் வைக்க மாட்டேன் என்று சொன்னாரோ அதையேதான் காலம் காலமாக அவர் படங்களில் வைத்து வருகிறார். உதாரணமாகா கதாநாயகன் பந்து விளையாடும் போது அது கதாநாயகியின் மார்புக்குள் விழுவது போன்ற காட்சிகளைக் கூட ஒரு தடவைக்கு மேல் தன் படங்களில் வைத்துள்ளார். சமீபத்தில் ரிலீஸான அவரின் ‘மத கஜ ராஜா’ படத்தில் கூட ஆபாசக் காட்சிகளும், இரட்டை அர்த்த வசனங்களும் இருக்கும். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு அப்பட்டமாக சுந்தர் சி புளுகுவதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரைப்படமாகிறது மேகாலயா ஹனிமூன் கொலை: ராஜா குடும்பத்தினர் சம்மதம்.. டைட்டில் அறிவிப்பு..!

40 கோடி சப்ஸ்க்ரைபர்களை தாண்டிய Mr.Beast! நேராக வீட்டுக்கு சென்று பரிசளித்த Youtube CEO!

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

அடுத்த கட்டுரையில்
Show comments