Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை விற்பனை: லைகா அறிவிப்பு!

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (13:28 IST)
வடிவேலு நடித்த 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவு பெற்று தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை விற்பனை குறித்த தகவலை லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளத்.
 
'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’  படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளதாகவும், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றிருப்பதாகவும் லைகா நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
 
வடிவேலு, ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனிஸ்காந்த், ஷிவானி நாராயணன், ஆர்ஜே விக்னேஷ், சஞ்சனா சிங், உள்பட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. 
 
லைகா தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படத்தை சுராஜ் இயக்கி உள்ளார்.  
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments