Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ‘ராயன்’ ரிலீஸ் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு.. சன் பிக்சர்ஸ் அதிரடி..!

Siva
திங்கள், 6 மே 2024 (18:13 IST)
தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ படத்தை அவரே இயக்கி நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னால் முடிவடைந்தது. மேலும் இந்த படத்தின் தொழில் நுட்ப பணிகள் இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தகவல் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த தகவலை சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. 
 
‘ராயன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. சரியான ரிலீஸ் தேதி குறித்த தகவல் இல்லை என்றாலும் ஜூன் மாதம் திரையரங்குகளில் தனுஷின் ‘ராயன்’ வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.. 
 
மேலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து இருப்பதால் இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து வரும் 9ஆம் தேதி வெளியாகும் பாடலும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆகும் என்று கூறப்படுகிறது.
 
தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் தனுஷுக்கு இன்னொரு வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் படத்தில் இந்த பிரபல ஹீரோதான் வில்லனா?

இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதைப் பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர்!

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தோடு கைகோர்க்கும் சசிகுமார்!

ஹெச் வினோத்தோடு ஒரு படம்… லாக் செய்த சிவகார்த்திகேயன்!

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments