Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன் தெலுங்கு மக்களின் படம்? – சுஹாசினி பேச்சு!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (10:31 IST)
பொன்னியின் செல்வன் தெலுங்கு மக்களின் படம் என நடிகை சுஹாசினி பேசியது வைரலாகியுள்ளது.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவில் நடைபெற்ற ப்ரோமோசன் விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி “பொன்னியின் செல்வன் படத்திற்கான படப்பிடிப்பு 10 நாட்கள்தான் தமிழகத்தில் நடைபெற்றது. மீத படப்பிடிப்புகள் முழுவதும் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும்தான் நடைபெற்றது. பொன்னியின் செல்வன் உங்கள் படம். இதை நீங்கள் வெற்றிபெற செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனிமையிலே இனிமை கானும் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

மினி கௌன் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா… வைரல் ஆல்பம்!

புஷ்பா 2 ரிலோடட் வெர்ஷனைக் கொண்டாடும் ரசிகர்கள்… அப்போ 2000 கோடி கன்ஃபார்மா?

துபாயை அடுத்து போர்ச்சுகல் செல்லும் அஜித்தின் ரேஸ் அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments