Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தூங்கா வனம் படத்தின் வசனகர்த்தா எழுத்தாளர் சுகா

தூங்கா வனம் படத்தின் வசனகர்த்தா எழுத்தாளர் சுகா
, வெள்ளி, 29 மே 2015 (16:00 IST)
சுகாவை எழுத்தாளர் என்பதா? இயக்குனர் என்பதா? பாலுமகேந்திராவின் சிஷ்யர்களில் சீனியர் சுகா. பட்டிமன்ற பிரபலம் நெல்லை கண்ணனின் மகன். பாலா, வெற்றிமாறன், சீனு ராமசாமி எல்லாம் இவரது வாடா போடா தம்பிகள். எழுத்தாளர் ஜெயமோகனின் நெருங்கிய நண்பர், இளையராஜாவின் எனிடைம் உதவியாளர்.
 
சுகா இயக்கிய முதல் படம், நெல்லையை பின்னணியில் தயாரான படித்துறை. ஆர்யாவின் முதல் தயாரிப்பு. என்னானது தெரியாது, படம் இன்னும் வெளியாகவில்லை. பாபநாசம் படத்தில் கமலுக்கும் பிறருக்கும் நெல்லை பாஷை கற்றுத் தந்தது இவர்தான். கமலின் புதிய படம், தூங்கா வனத்தில் வசனகர்த்தாவாக பிரமோஷன் கிடைத்திருக்கிறது.
 
இனிக்க இனிக்க எழுதுவதில் சுகா வல்லவர். மனசை பிசையும் வார்த்தைகளை கோர்ப்பதில் கை தேர்ந்தவர். அவர் த்ரில்லர் படத்துக்கு எழுதும் வசனத்தைப் பார்க்க சிலர் ஆவலாகத்தான் இருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil