கஷ்டப்பட்ட தயாரிப்பாளருக்கு கைகொடுத்த நடிகை ஓவியா

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2017 (12:59 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஓவியா. பல ரசிகர்கள்  மிகவும் ரசிக்கும் நாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார் ஓவியா.

 
இந்நிலையில் நடிகை ஓவியா ராஜதுரை இயக்கத்தில் நடித்துள்ள படம் ஓவியாவ விட்டா யாரு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். தற்போது இப்படம் ஓவியாவை விட்டா யாரு சீனி என்று  பெயர் மாற்றப்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் மதுரை செல்வம் படத்தை வெளியிட மிகவும் கஷ்டப்பட்டு வருகிறாராம்.
 
இந்த தகவலை அறிந்த ஓவியா தயாரிப்பாளருக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, கவலைப்படாதீர்கள், படம் எப்போது என்று சொல்லுங்கள் புரொமோஷனுக்கு நான் வருகிறேன். நீங்கள் ஜெயிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
 
பல நடிகர், நடிகைகள் பணம் கொடுத்தால் தான் புரொமோஷனுக்கு வருவேன் என்று கூறிவரும் நிலையில், ஓவியா அப்படி சொன்னது தனது உதவியாக இருந்ததாக தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments