Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மஞ்சுமெல் பாய்ஸ்’ கிளாஸிக் ஹிட் : நன்றி தெரிவித்த நடிகர் தீபக்

J.Durai
புதன், 6 மார்ச் 2024 (15:59 IST)
ஒரு வெற்றியில் அதிர்ஷ்டம் முக்கிய பங்காக இருக்கலாம். ஆனால், உண்மையான அதிர்ஷ்டம் என்பது அசைக்க முடியாத ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பின் மூலம் மட்டுமே நிலையாக இருக்கிறது. ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் ஒரே இரவில் சென்சேஷனலாக மாறிவிட்டது என சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இந்தப் படக்குழுவில் பணியாற்றிய ஒவ்வொருவரும் இந்த வெற்றிக்காக நீண்ட காலம் சினிமாத் துறையில் போராடியுள்ளனர். இந்தப் படத்தில் 'சுதீஷ்' என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் நடிகர் தீபக் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளார்.
 
இந்தக் கதாபாத்திரத்திற்காக அபாரமான அன்பையும் தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றதற்காக அவர் நன்றி தெரிவித்துள்ளார். ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ படம் மூலமாக தனது சினிமா பயணத்தை 14 வருடங்களுக்கு முன்பு தீபக் தொடங்கினார். அதன் பிறகு, ‘தட்டத்தின் மறையது’, ’தீரா’, ’ரேக்ஷாதிகாரி பைஜு’, ’கேப்டன்’ மற்றும் ’கண்ணூர் ஸ்குவாட்’ போன்ற பல ஹிட் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 
 
அவரது சமீபத்திய வெளியீடான ’மஞ்சுமெல் பாய்ஸ்’ நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் சிதம்பரத்தின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு ‘சுதீஷ்’ என்ற கதாபாத்திரத்தில் தான் பொருத்தமாக இருப்பேன் எனத் தேர்வு செய்ததற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் தீபக். மேலும்,  இயக்குநருக்கும் பார்வையாளர்களுக்கும், குறிப்பாக தமிழ் பார்வையாளர்களுக்கும், தனது நடிப்பை ஆதரித்து பாராட்டுவதற்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

எம்புரான் அந்த மாதிரி பிரம்மாண்ட பட்ஜெட் படம் இல்லை… இயக்குனர் பிரித்விராஜ்!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் அப்டேட்…!

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments