ஸ்டண்ட் சில்வாவை பாராட்டிய இயக்குனர் சுப்ரமண்யம் சிவா!

Webdunia
சனி, 8 மே 2021 (09:02 IST)
சண்டை இயக்குனர் ஸ்டண்ட் சில்வா இயக்கியுள்ள படத்தில் நடித்துள்ள சுப்ரமண்யம் சிவா படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.

இது சம்மந்தமாக சுப்ரமண்யம் சிவா வெளியிட்டுள்ள முகநூல் பதிவு:-

மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா இந்தியாவின் சண்டை இயக்குநர்களில் முக்கியமானவர்களில் ஒருவர். இயக்குனர் விஜய் எழுதிய கதையில், அண்ணன் சமுத்திரக்கனி, ரீமா கல்லிங்கல், பூஜா கண்ணன்(சாய் பல்லவி தங்கை) நடிக்க, தம்பி சில்வா முதல்முறையாக இயக்கும் இப்படத்தில் என்னை நட்புக்காக 7 நிமிடம் வர கூடிய ஒரு முரட்டுகாட்சியில் நடிக்க வைத்தார், இன்று டப்பிங் முடித்தேன். படத்தின் சில காட்சிகளைக் காட்டினார். பார்த்த நான் அசந்து விட்டேன். முரட்டு உருவம் கொண்ட, ஒரு சண்டை இயக்குநரிடம், பூக்கள் தாலாட்டு பாடுவது போல் ஒரு கவிதை படம், பாச உணர்வுகள் மேலோங்கி, நம் கண்களைப் பனிக்கச் செய்யும் சிறந்த காட்சிகள் அவை.

மிகச் சிறப்பு தம்பி. உன்னிடம் இப்படி ஒரு உணர்ச்சிப் பூர்வமான படத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஃபீல் குட் மூவி என்பார்களே, அவற்றினுள் முக்கிய படமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. ஸ்டன்ட் சில்வாவே அன்பால் நிறைந்தவனே, மிக பெரிய வெற்றியும், பேரும் உன்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் வழியாக இன்னும் பல சாதனைகள் செய்து வாழ்வாங்கு வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். வாழ்த்துக்கள் தம்பி. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments