Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினிக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? மீண்டும் சீண்டும் சுப்பிரமணியன் சுவாமி

ரஜினிக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? மீண்டும் சீண்டும் சுப்பிரமணியன் சுவாமி
, புதன், 19 ஏப்ரல் 2017 (06:37 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை செல்ல முடிவெடுத்து பின்னர் திடீரென அந்த திட்டத்தை ரத்து செய்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, 'ரஜினி ஒரு கோழை' என்று விமர்சித்தார். அதுமட்டுமின்றி கமல்ஹாசனை ஒரு அகங்காரம் உள்ள முட்டாள் என்றும் அவர் கூறினார். இதற்கு கமல், ரஜினி ரசிகர்களிடம் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது மீண்டும் ரஜினி ரசிகர்களை சீண்டும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்



 


ரஜினிக்கு அரசியலைப் பற்றி ஒன்றும் தெரியாது என்றும், அரசியலுக்கு வருவதாக அவர் மக்களை ஏமாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் ரஜினி மட்டுமின்றி தமிழக அரசியல் வாதிகள் அனைவருமே நல்ல நடிகர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் ஃபேஸ்புக், டுவிட்டரில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் மாமாவும் இவரே! அண்ணனும் இவரே!