Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுதமி வீட்டிற்கு பதிலாக கமல் வீட்டில் ஸ்டிக்கர்?

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (12:11 IST)
கவுதமி வீட்டிற்கு பதிலாக கமல் வீட்டில் ஸ்டிக்கர்?
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் வீட்டில் இன்று காலை திடீரென கொரோனா குறித்த ஸ்டிக்கரை மாநகராட்சி ஊழியர்கள் ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இதனை அடுத்த சில நிமிடங்களில் நீக்கப்பட்டது என்பது என்பதையும் இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் விளக்கமளித்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். கமல் வீட்டில் வீட்டில் தங்கியிருந்த ஒருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர் என்பதால் அவரது வீட்டில் மாநகராட்சி ஊழியர்கள் ஸ்டிக்கர் ஒட்டியதாகவும், ஆனால் அந்த நபர் தற்போது அந்த வீட்டில் இல்லை என்பதால் ஸ்டிக்கர் நீக்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது 
 
ஆனால் அந்த நபர் யார் என்பது குறித்து மாநகராட்சி ஆணையர் கூறவில்லை. இந்த நிலையில் நடிகை கவுதமி வீட்டில் ஒட்டவேண்டிய தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் தான் கமல் வீட்டில் தவறுதலாக ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கமல் வீட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன் கௌதமி தங்கியிருந்தார் எனவும் அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியை மாற்றப்படாமல் இருந்ததால் அந்த முகவரியை வைத்து கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஓட்டியதாக கூறப்படுகிறது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் VJS நடிக்கும் படத்தில் இணையும் முன்னணி பாலிவுட் நடிகை!

நான் ராஜமௌலி படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி!

புஷ்பா கதாபாத்திரத்தை இப்படிதான் நான் உருவாக்கினேன் -இயக்குனர் சுகுமார் பகிர்ந்த தகவல்!

அல்லு அர்ஜுன் & அட்லி கூட்டணியில் உருவாகும் படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளரா?

Pure 90S Vibe GBU மாமே!: அஜித் படத்துல அண்ணன எறக்குறோம்.. ‘அக்கா மக’ டார்கிய உள்ளே கொண்டு வந்த ஆதிக்!

அடுத்த கட்டுரையில்
Show comments