Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கர்- ராம்சரண் படத்தின் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் தமன்!

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (09:48 IST)
ஷங்கர் ராம்சரண் படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் சுரேஷ் கோபி, ரஹ்மான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யாவிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளார்களாம்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் இயக்குனர் ஷங்கரோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து படத்தின் கம்போசிங் பணிகள் நடைபெற்று வருவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments