Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேம்சேஞ்சர் படத்தில் அது சரியாக இல்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

vinoth
புதன், 19 மார்ச் 2025 (15:22 IST)
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில், தில் ராஜூ தயாரித்த ‘கேம்சேஞ்சர்’ திரைப்படம் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியிருந்தார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க, தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

படம் மிக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி ரிலீஸானது. முதல் நாளில் உலகளவில் 186 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் எழுந்த எதிரமறையான விமர்சனங்களால் வசூலில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால் இந்த படத்தின் பட்ஜெட்டில் 50 சதவீத வசூலைக் கூட படம் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் படம் பற்றி ஒரு சர்ச்சைக் கருத்தைப் பேசியுள்ளார். அதில் “ஒரு பாடல் ஹிட்டாவது இசையமைப்பாளர் கையில் மட்டும் இல்லை. நடன இயக்குனர் சரியான நடனம் அமைக்கவேண்டும். கேம்சேஞ்சர் படத்தின் பாடல்களில் ரசிகர்களைக் கவரும் ஹூக் ஸ்டெப்புகள் இல்லை. அதனால் ரசிகர்களோடு ஒரு கனெக்‌ஷன் கிடைக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு பிடித்தமானதை பெற்றுவிட்டேன்.. விவாகரத்துக்கு பின் ஏஆர் ரஹ்மான் செய்த செயல்..!

சென்னையில் நடிகர் பாபிசிம்ஹா கார் விபத்து. ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயம்..

இன்னும் எத்தனை திருமணம் செய்வார் கமல்ஹாசன்.. அவரே அளித்த பதில்..!

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அப்பாஸ்!

சூரி நடிக்கும் ‘மண்டாடி’.. வித்தியாசமான தலைப்பின் அர்த்தம் இதுதானா?

அடுத்த கட்டுரையில்
Show comments