ஆஸ்கர் விருது ப்ரமோஷன்களுக்காக 50 கோடியை வாரியிறைக்கும் ராஜமௌலி!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (15:02 IST)
இயக்குனர் ராஜமௌலி இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் பல பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடுகிறது.

தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய்தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்த படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்தது இந்த படம். இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் பரிந்துரை படங்களின் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்திய அரசின் சார்பில் ”செல்லோ ஷோ (Chhello Show)” என்ற குஜராத்தி படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.

ஆனாலும் சோர்வடையாத ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர் படத்தை வேறுவிதத்தில் ஆஸ்கர் ரேஸில் நுழைத்துள்ளார். ”For your Consideration” என்ற சிறப்பு பிரிவின் மூலமாக ஆஸ்கர் விருதுக்கு பல பிரிவுகளில் விண்ணப்பித்துள்ளது ஆர்.ஆர்.ஆர்.

இந்நிலையில் இந்த படத்தை ஜூரிக்களுக்குக் காட்டுவதற்காக இப்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார் ராஜமௌலி. தனது பழைய படங்களை திரையிட்டு ஆர் ஆர் ஆர் படத்துக்காக ப்ரமோஷன் செய்து வருகிறார். இந்நிலையில் ஆஸ்கர் விருது ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே சுமார் 50 கோடி ரூபாய் வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

லெஜண்ட் சரவணனின் இரண்டாவது பட ரிலீஸ் அப்டேட்!

ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments