Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலுக்கு நன்றி, ஆனா அந்த கேமிராதான்....ஸ்ரீரெட்டி

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (19:30 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை கடந்த சில மாதங்களாக பாலியல் குற்றச்சாட்டுக்களால் பரபரப்பாக்கிய ஸ்ரீரெட்டி தற்போது திரைப்படங்களில் வாய்ப்பு பெற்று பிசியாகிவிட்டார். முதல்கட்டமாக அவருடைய வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வரும் ஸ்ரீரெட்டி, மேலும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று விஷால் தனது 'சண்டக்கோழி 2' படத்தின் இசை வெளியீட்டின்போது ஸ்ரீரெட்டி குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, 'ஸ்ரீரெட்டிக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி. ஆனால் அதே நேரத்தில் அவருடன் நடிக்கும் நடிகர்கள் இனி உஷாராக இருப்பார்கள். தவறு நடக்காமல் இருப்பதற்கு அவரை சுற்றி எல்லோரும் கேமரா வைத்து விடுவார்கள் என்று நகைச்சுவையுடன் கூறினார்.

விஷாலின் இந்த கருத்துக்கு ஸ்ரீரெட்டி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அந்த கேமிரா விஷயம்தான் என்று கூறி ஒரு சிரிப்பை உதிர்த்துள்ளார். ஸ்ரீரெட்டி நடிப்பதில் பிசியாகிவிட்டால் பாலியல் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார் என்பதால் பல திரையுலக பிரபலங்கள் நிம்மதி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்