Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்மேல தப்பு இல்லை - ஸ்ரீதிவ்யா விளக்கம்

என்மேல தப்பு இல்லை - ஸ்ரீதிவ்யா விளக்கம்
, செவ்வாய், 25 நவம்பர் 2014 (11:04 IST)
பென்சில், வெள்ளைக்கார துரை, காக்கி சட்டை என்று ஸ்ரீதிவ்யாவின் திரைவாழ்க்கை ஹைஸ்பீடில் போய்க்கொண்டிருக்கிறது. அதில் ஸ்பீடு பிரேக்கரை போட்டார்கள் காட்டு மல்லி மற்றும் நகர்ப்புறம் படங்களின் தயாரிப்பாளர்கள்.
 
இவை இரண்டும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் ஸ்ரீதிவ்யா அறிமுகமாகும் முன் நடித்த படங்கள். பெரிய நடிகர்களின் படங்கள் கிடைத்ததால் எங்கள் படங்களில் நடிக்க மறுக்கிறார் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஸ்ரீதிவ்யா மீது இவ்விரு தயாரிப்பாளர்கள் சார்பில் புகார் தரப்பட்டது. ஆனால் அதனை ஸ்ரீதிவ்யா மறுத்துள்ளார்.
 
இவ்விரு படங்களுக்கும் ஒழுங்காகதான் கால்ஷீட் தந்தேன். அவர்கள்தான் சில வருடங்கள் முன்பு படத்தை திடீரென்று நிறுத்தினார்கள். அதற்கு நான் பொறுப்பல்ல என பொறுப்பாக விளக்கம் தந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil