கடவுள் காமசூத்ராவை என் வாழ்க்கை முழுவதும் எழுதிவிட்டார் – ஸ்ரீரெட்டியின் அடுத்த சர்ச்சைப் பதிவு !

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (10:12 IST)
தெலுங்கு துணை நடிகையான ஸ்ரீரெட்டி முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறிய நிலையில் இப்போது சர்ச்சையானப் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் மீதும் வரிசையாக பாலியல் புகார் கூறினார் ஸ்ரீ ரெட்டி. நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சந்தீப், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சுந்தர்.சி  ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பைக் கிளப்பினார். அது மட்டுமல்லாமல் அவ்வபோது சமூகவலைதளங்களில் தெலுங்கு திரையுலக நட்சத்திரங்களான பவன் கல்யாண் உள்ளிட்ட சிலரைக் கேலி செய்து பதிவுகளையும் பகிர்ந்து வந்தார்.

டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆர்வமாக இயங்கி வரும் அவர் அவ்வப்போது சர்ச்சையானக் கருத்துகள் மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவரின் பேஸ்புக் பக்கத்தில் ‘அவர்கள் என் பிறப்புறுப்பில் காமசூத்ராவை எழுதினார்கள். கடவுள் என் வாழ்க்கை முழுவதற்கும் காமசூத்ராவை எழுதிவிட்டார்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்குப் பலரும் எதிர்வினையாற்ற ஆரம்பித்துள்ள நிலையில் அவர் பரபரப்புக்காகவும் புகழுக்காகவும் இதை செய்வதாக கருத்துகள் எழுந்துள்ளன. தன் மீதான பாலியல் புகார்களுக்கு எதிராக அவர் இதுவரை சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்பது அவர் மீதான சந்தேகங்களுக்கு மேலும் வலு சேர்க்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு! திவ்யாவிடம் எகிறிய வாட்டர்மெலன்! Biggboss-ல் ட்விஸ்ட்!

ரித்திகா சிங்கின் வைரல் க்யூட் க்ளிக்ஸ்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் வைரல் க்யூட் போட்டோஸ்!

மாரி செல்வராஜின் மாயாஜால உலகில் தனுஷ்… ‘தனுஷ் 56’ பட அப்டேட்!

சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்