Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக சினிமா: வெளியானது ஸ்க்விட் கேம்ஸ் சீரிஸின் மூன்றாம் பாகம்!

vinoth
சனி, 28 ஜூன் 2025 (08:27 IST)
கொரியன் சினிமா மற்றும் சீரிஸ்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. ஹாலிவுட் சினிமாக்களுக்கு பின்னர் அதிக ரசிகர்களைக் கொண்ட சினிமா உலகமாக கொரியன் சினிமா உள்ளது. இந்நிலையில் நெட்பிளிக்ஸில் ஒரு மாதத்துக்கு முன்னர் வெளியான ஸ்கிவிட் கேம்ஸ் என்ற சீரிஸ் உலகளவில் கவனத்தைப் பெற்று பார்க்கப்பட்டது.

இந்த தொடர் குறித்து பேசிய நெட்பிளிக்ஸின் தலைமை செயல் அதிகாரி ‘இந்த தொடர் உலக அளவில் பிரம்மாண்டமாக ரசிகர்களை சென்று சேரும். ஆங்கிலமல்லாத தொடர்களில் நம்பர் ஒன் சீரிஸாக மாறும்’ எனக் கூறியுள்ளார். வெளியானதில் இருந்து சுமார் 11 கோடி பேரால் நெட்பிளிக்ஸ் தளத்திலேயே பார்க்கப்பட்ட சீரிஸாக அமைந்தது.

இதையடுத்து இந்த சீசனின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸானது. முதல் சீசன் அளவுக்கு இரண்டாவது சீசன் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் கவனம் பெற்றது. இந்நிலையில் இதன் மூன்றாவது மற்றும் இறுதிபாகம் தற்போது நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகியுள்ளது. இதுதான் இறுதிபாகம் என்பதால் முந்தைய சீசன்களில் இருந்த பல முடிச்சுகள் இதில் அவிழும் என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இதைக் காண காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலக சினிமா: வெளியானது ஸ்க்விட் கேம்ஸ் சீரிஸின் மூன்றாம் பாகம்!

ஜானகி என்று பெயர் இருந்தால் என்ன தவறு?... தணிக்கை வாரியத்துக்கு நீதிமன்றம் கேள்வி!

’கூலி’ தான் கடைசி படம்.. ரெட் ஜெயண்ட் எடுத்த அதிரடி முடிவு?

அஜித்தின் அடுத்த படத்தை அவரே தயாரிக்கின்றாரா? சொந்த காசை செலவு செய்வதால் ஏற்பட்ட சந்தேகம்..!

ரஜினிக்கு கதை சொல்லியுள்ள 4 இயக்குனர்கள்.. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments