Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எஸ்பிஐ சினிமாஸ் ஒப்பந்தம் ரத்து: நடிகர் சங்கம் அறிவிப்பு

எஸ்பிஐ சினிமாஸ் ஒப்பந்தம் ரத்து: நடிகர் சங்கம் அறிவிப்பு

எஸ்பிஐ சினிமாஸ் ஒப்பந்தம் ரத்து: நடிகர் சங்கம் அறிவிப்பு
, செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (00:10 IST)
எஸ்பிஐ சினிமாஸ் உடன்  போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து, சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கடந்த நடிகர் சங்க அறக்கட்டளை நிர்வாகம் மூலம் கடந்த 2010 ஆம் வருடம் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட எஸ்பிஐ சினிமாஸ் உடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
 
அந்த ஒப்பந்தம் 9 பேர் கொண்ட அறக்கட்டளையின் நிர்வாகத்தில் 2 பேர் மட்டுமே கொண்டு போடப்பட்டதால் அது அறக்கட்டளை சட்டப்பட்டி தவறானது என சங்க உறுப்பினர் திரு.பூச்சி முருகன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
நடிகர்களான நாங்கள் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி பல முறை கோரிக்கை வைத்தோம். அது நிறைவேற்றப்படவில்லை. இதனாலே பாண்டவர் அணி தேர்தலில் நின்று வெற்றி பெற்றது.
 
அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய, அந்த தனியார் நிறுவனத்துடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன் விளைவாக, சுமார் 2 கோடியே 48 லட்ச ரூபாயை கொடுக்க முடிவு செய்யப்பட்டு, ஒப்புதல் பெற்பட்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil