Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

Siva
திங்கள், 23 செப்டம்பர் 2024 (15:05 IST)
சென்னையின் முக்கிய பகுதிக்கு 'எஸ்பி பாலசுப்ரமணியம் நகர்' என்ற பெயர் வைக்க வேண்டும் என்று எஸ்பிபி சரண், முதல்வரிடம் மனு அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த 1966 ஆம் ஆண்டு முதல் பின்னணி பாடகராக இருந்தவர் எஸ்பி.பாலசுப்ரமணியம் . இவர்  தமிழ் உள்பட பல தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி உள்பட வட இந்திய மொழிகளிலும் சுமார் 40 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். இவருக்கு பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன்   விருதுகள் வழங்கப்பட்டன. அது மட்டுமின்றி ஆறு முறை தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் வாழ்ந்த காம்தார் நகரை 'எஸ் பி பாலசுப்ரமணியம் நகர்' என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று அவரது மகன் எஸ்பிபி சரண், முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த மனு விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த சீனை ஏன்யா தூக்கினீங்க? செம Vibe பண்ணிருக்கலாமே? - Tourist Family Deleted scene ரியாக்‌ஷன்!

மாடர்ன் உடையில் ஜொலிக்கும் ஷிவானி நாராயணன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

இசை நிகழ்ச்சியில் செம்ம vibeல் ஆண்ட்ரியா… க்யூட் போட்டோஸ்!

ஓடாத படத்தை முதல் நாள் படப்பிடிப்பிலேயே கணித்துவிடுவேன் – சந்தானம் பகிர்ந்த தகவல்!

தனுஷ் படத்தில் மட்டும்தான் என்னை பாடிஷேமிங் செய்யவில்லை.. வித்யூலேகா ராமன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments