Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்ட மரண மாஸ் கலாய்: எஸ்.பி.பி-க்கு வருத்தமா?

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (16:58 IST)
கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி சமூக வலைதளங்களில் அதிர வைத்தது ரஜினியின் பேட்ட படத்தில் இடம் பெற்றுள்ள மரண மாஸ் பாடல்.  இந்த பாடலின் சிங்கிள் டிராக் தரலோக்கலாக சென்னை தமிழில் இருந்ததால் கேட்டவுடன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.  
 
இந்த பாடலை அனிருத்தும், எஸ்.பி.பாலசுப்பிரமணியனும் பாடியிருந்தனர். இந்த பாடல் வெளியான பின்பு பலர் பாராட்டினாலும், அதில் எஸ்பிபி-யின் போர்ஷன் குறைவாக இருந்ததால் அனிருத்தை பலர் கலாய்த்து இருந்தனர். இது தொடர்பாக பல மீம்களும் வெளியானது. 
 
இந்நிலையில், இந்த பாடலை பாடியது குறித்து எஸ்பிபி பேட்டி அளித்துள்ளார். அதில், நீண்ட காலம் கழித்து ரஜினிகாக பாடியதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அந்த பாட்டில் என் போர்ஷன் குறைவு. ஆனால் அது எனக்கு பிரச்சனை இல்லை. 
 
நான் பாடினால் நன்றாக இருக்கும் என்று பேட்ட படக்குழு நினைத்தது. நான் அந்த பாடலை பாடியதில் மகிழ்ச்சி. அந்த பாடல் மிகவும் பிரபலமாகும் என தெரிவித்துள்ளார். 
 
இதோடு மற்றொரு பேட்ட அப்டேட்டும் வெளியாகி உள்ளது. அதாவது, நாளை மாலை 6 மணிக்கு பேட்ட படத்தின் இரண்டாவது டிராக் வெளியாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ‘சர்தார் 2’.. அடுத்தகட்ட பணிகள் இன்று முதல் ஆரம்பம்..!

ரஜினி - நெல்சனின் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடக்கம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

ஸ்ரீதேவி படத்தின் 2ஆம் பாக அறிவிப்பு.. மகள் குஷி கபூர் தான் நாயகி..!

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments