Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களுக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா? - பேருந்து உரிமையாளர்களுக்கு விஷால் கேள்வி

Webdunia
புதன், 25 மே 2016 (17:12 IST)
பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்வதும் எப்படி சட்ட விரோதமானதோ, அது போலவே திருட்டு விசிடியை பஸ்களில் ஒளிபரப்புவதும் சட்ட விரோதமானதே என்று விஷால் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து, தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அதன் பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
 
அதில், "பல கோடி முதலீடு செய்து தயாரிக்கப்படும் திரைப்படம் தியேட்டரில் ரசிகர்கள் ரசித்தால் மட்டுமே போட்ட முதலீட்டை திரும்ப எடுக்க முடியும்! இதில் தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் திருட்டு விசிடி ஆகியவற்றின் பாதிப்புகளை மீறி வெற்றி பெற போராட வேண்டிய நிலை, இது திரை உலகை சார்ந்த அனைத்து பிரிவினர்களுக்கும் சவாலாக உள்ளது.
 
இந்நிலையில் தனியார் பேருந்துகளில் சட்டவிரோதமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது சமீபகாலங்களில் சர்வ சாதாரணமாகி விட்டது. அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களை மீறிப் பேருந்தை ஓட்டுவதும், பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்வதும் எப்படி சட்ட விரோதமானதோ, அது போலவே திருட்டு விசிடியை பஸ்களில் ஒளிபரப்புவதும் சட்ட விரோதமானதே!
 
அதனால், திரை உலகை காப்பாற்ற நாங்கள் பல நிலைகளில் போராடி வருகிறோம். அதற்காக தமிழகமெங்கும் எங்கள் நடிகர்களின் ரசிகர் மன்றங்களின் மூலமாக பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
 
இதுவரை தங்கள் கவனத்தை மீறி ஓட்டுநர்களால் இந்த தவறு நடந்திருந்தால் இனிமேல் இது நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுகிறோம். இதற்கு தங்களுடைய முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments