Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை 2 எப்ப ரிலீஸ் ஆகும்?... நடிகர் சூரி அளித்த பதில்!

vinoth
வெள்ளி, 31 மே 2024 (11:55 IST)
கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில்  தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது.

இப்போது படத்தில் சமுத்திரக்கனி, மஞ்சு வாரியார், கென் கருணாஸ் உள்ளிட்டவர்கள் படத்தில் இணைந்துள்ளார்கள். அதனால் ஷூட்டிங் எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் இழுத்துக் கொண்டு செல்கிறது. இந்நிலையில் கருடன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சூரியிடம் விடுதலை 2 எப்போது ரிலீஸ் ஆகும் எனக் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் “எனக்கு சரியாக தெரியவில்லை. நான் என்ன நினைக்கிறேன் என்றால் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் இந்த படம் ரிலீஸ் ஆகிவிடும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments