விஷ்ணு விஷால் தந்தை மீது சூரியின் புகார்… 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவு!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (17:06 IST)
சூரி அளித்த புகாரின் மேல் நடக்கும் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வரவேற்பைப் பெற்ற கதாநாயகன் நகைச்சுவை நடிகர் காம்போவில் விஷ்ணு விஷாலும், சூரியும் இருந்து வந்தனர். இவர்கள் சேர்ந்து நடித்த படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் வரவேற்பைப் பெற்றவை. இந்நிலையில் அவர்களுக்கு கருத்து வேறுபாடு எழும் விதமாக சூரி காவல் நிலையத்தில் ஒரு புகாரை அளித்தார்.

அதில் நிலம் வாங்கி தருவதாக 2.7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பிரபல நடிகர் தயாரிப்பாளர் அன்பு வேலவன் மற்றும் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோர் தன்னை ஏமாற்றியதாக கூறியிருந்தார். ஆனால் அதை மறுத்த விஷ்ணு விஷால் தன் தந்தை குற்றமற்றவர் என சமூகவலைதளங்களில் கூறி வந்தார். இந்த வழக்கின் விசாரணை இப்போது நடந்து வருகிறது.

ஆனால் சூரியின் வழக்கறிஞர் விஷ்ணுவிஷாலின் தந்தை ரமேஷ் முன்னாள் டிஜிபி என்பதால் வழக்கு விசாரணை செய்யும் அதிகாரிகள் அவருக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். இதைக் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கேக்குறவன் கேனையா இருந்தா.. நான் மிரட்டினேனா? - ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட வீடியோ!

VJ பாருவை மிஞ்சிய சவுண்ட் பார்ட்டி திவ்யா? தொட்டதெற்கெல்லாம் வெடிக்கும் சண்டை! - Biggboss season 9

முகவரி மற்றும் வேட்டையாடு விளையாடு படங்களின் வரிசையில் இணைந்த ஆர்யன்…க்ளைமேக்ஸ் மாற்றம்!

பிஸ்னஸ் மாடலை மாற்றும் ஓடிடி நிறுவனங்கள்… தயாரிப்பாளர்களுக்கு அடுத்த இடி!

அன்பான ரசிகர்களே அதை மட்டும் செய்யாதீர்கள்… தனுஷ் 54 படக்குழு வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments