Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’விடுதலை 2’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூரி..!

Siva
செவ்வாய், 16 ஜூலை 2024 (12:40 IST)
சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் தேதியை சூரி தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது.இதனை அடுத்து இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11:30 மணிக்கு வெளியாகும் என சூரி தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாத்தியார் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி முதல் பாகத்தில் சில காட்சிகள் மட்டுமே தோன்றிய நிலையில் இரண்டாம் பாகத்தில் அவருடைய பின்னணி, அவர் எவ்வாறு தீவிரவாதியாக மாறினார் என்பது குறித்த கதையம்சம் கொண்டது தான் விடுதலை 2 என்று கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெட்ரோ’ பட்ஜெட் 65 கோடி தான்.. ஆனால் சாட்டிலைட், டிஜிட்டலில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

ஸ்ரீலீலாவை கூட்டத்தில் கையை பிடித்து இழுத்த ரசிகர்.. கண்டுகொள்ளாத ஹீரோ..!

ஒரு டிக்கெட் 2 ஆயிரம் ரூவா! ஷோவை கேன்சல் பண்ணிக்கிறோம்! - Good Bad Ugly பட முதல் காட்சி ரத்து!?

என்ன ஸ்க்ரிப்ட் இது! ஹாலிவுட்டை அலறவிட்ட அட்லீ - அல்லு அர்ஜூன்! - சன் பிக்சர்ஸ் வெளிட்ட Announcement Video!

Good Bad Ugly ரன்னிங் டைம் இவ்ளோ நேரமா? தியேட்டரே சிதறப்போகுது! சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments