15 கோடி பட்ஜெட்டில் ஒரு சூரியா படம்: ஆச்சரிய தகவல்

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (21:15 IST)
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூரரைப்போற்று’ படத்தின் பட்ஜெட் சூர்யாவின் சம்பளத்தை தவிர்த்து மொத்தமே 15 கோடி தான் என்ற தகவல் வெளிவந்துள்ளது
 
இந்த படத்தின் இயக்குனர், நாயகி உள்பட அனைவரது சம்பளம் மற்றும் படப்பிடிப்பிற்கான செலவு ஆகியவை சேர்த்து இந்த படத்தின் பட்ஜெட் 15 கோடி என்று கூறப்படுகிறது. இந்த படம் சூர்யாவின் சொந்த தயாரிப்பில் தயாரிக்கப்பட்டு வருவதால் சூர்யாவின் சம்பளத்தை கணக்கில் கொள்ள வேண்டியதில்லை என்றும் அவரது 2டி நிறுவனம் இந்த படத்திற்காக செய்த செலவு மொத்தமே 15 கோடி என்றும் சுதாவின் சரியான திட்டமிடல் தான் இந்த படம் இவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் தற்போது வரை இந்த படத்தின் வியாபாரத்தை கணக்கில் கொண்டால் சூர்யாவுக்கு ரூபாய் 40 கோடி லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சூரரைப்போற்று திரைப்படம் சுமாராக ஓடினாலும் கூட மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்றும் ஹிட் படம் என்றால் அவருடைய லாபம் கணக்கில் அடங்காமல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது ரிலீஸுக்கு முன்னரே சூரரைப்போற்று திரைப்படத்தின் வெற்றி கோலிவுட் திரையுலகிலனர்களை ஆச்சரியப்பட செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments