Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூதுகவ்வும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் லொள்ளு சபா மனோகரா?… தயாரிப்பாளர் சி வி குமார் பகிர்ந்த தகவல்!

vinoth
வெள்ளி, 29 மார்ச் 2024 (07:05 IST)
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான சூதுகவ்வும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், அசோக் செல்வன், கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், சஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இப்போது 10 வருடங்கள் கழித்து சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் சி வி குமார். எஸ் ஜெ அர்ஜுன் இயக்கும் இந்த படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கருணாகாரன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகிக் கவனம் பெற்றது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சி வி குமார் அளித்துள்ள ஒரு நேர்காணலில் சூதுகவ்வும் படத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “சூதுகவ்வும் திரைக்கதையை நலன் என்னிடம் சொன்னபோது விஜய் சேதுபதியின் பாத்திரத்தில் லொள்ளு சபா மனோகர்தான் நடிக்க வேண்டும் எனக் கூறினார். நான், கார்த்திக் சுப்பராஜ் எல்லாம் சமாதானம் செய்து விஜய் சேதுபதியை நடிக்க வைக்க அவரை சமாதானப்படுத்தினோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments