Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித் 57: ’தல’ நடித்த காட்சிகள் இணையதளத்தில்.........

அஜித் 57: ’தல’ நடித்த காட்சிகள் இணையதளத்தில்.........
, சனி, 20 ஆகஸ்ட் 2016 (12:33 IST)
அஜித்குமார், தனது புதிய படத்தில் நடித்த காட்சிகளை சிலர் திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். 


 
 
நடிகர்களும், இயக்குனர்களும் தங்கள் புதிய படங்களின் கதை மற்றும் தோற்றங்களை ரகசியமாக வைத்து இருப்பது வழக்கம். அவைகள் வெளியானால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்பது அவர்கள் கணிப்பு. 
 
இந்நிலையில், சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பும் ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகிறது. இது அஜித்குமாரின் 57-வது படமாகும். இதில் சர்வதேச போலீஸ் அதிகாரி வேடத்தில் அஜித் நடிப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படப்பிடிப்பில் அஜித்குமார் நடித்த காட்சிகளை யாரோ திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.
 
ரகசியமாக வைத்திருந்த அஜித்குமார் தோற்றம் இதன்மூலம் வெளிப்பட்டுவிட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோக்கர் வெறும் படமல்ல: கீ.வீரமணி