Webdunia - Bharat's app for daily news and videos

Install App

83 படத்தை புறக்கணிக்க வேண்டும்! ட்விட்டரில் ட்ரெண்டிங்! – காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (09:20 IST)
ரன்வீர் சிங் நடித்து இன்று வெளியாகும் கிரிக்கெட் படமான 83 ஐ புறக்கணிக்க வேண்டும் என சிலர் ட்ரெண்ட் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான நாள். உலக்கோப்பை அரையிறுதி கூட தொட்டிருக்காத இந்தியா முதன்முறையாக அன்று வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்று வரலாற்றில் இடம் பிடித்தது. அந்த சுவாரஸ்யமான நிகழ்வை மையப்படுத்தி இந்தியில் 83 படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் கபில் தேவாக ரன்வீர் சிங், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக ஜீவா, மான் சிங் கதாபாத்திரத்தில் பங்கஜ் த்ரிபாதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் இன்று தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என #Boycott83 என்ற ஹேஷ்டேகை பலர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னதாக ரன்வீர் சிங் இறந்த சுஷாந்த் சிங்கை ஒரு விளம்பரத்தில் பகடி செய்யும் வகையில் பேசியதாக கூறி இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என பலர் கூறி வருகின்றனர். இதுபோல மேலும் பல காரணங்களை சொல்லியும் பலர் படத்தை புறக்கணிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் சமந்தாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

இப்போதே என்னை ஓய்வு பெற சொன்னாலும் மகிழ்ச்சிதான்.. ராஷ்மிகா நெகிழ்ச்சி!

அடுத்தடுத்து அதிரிபுதிரி ஹிட்.. சிரஞ்சீவி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற இளம் இயக்குனர்!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த விஷால்- சுந்தர் சி யின் ‘மத கஜ ராஜா’!

அடுத்த கட்டுரையில்
Show comments