சினேகன் தொடங்கும் ‘மக்கள் நூலகம்’

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (17:04 IST)
கவிஞர் மற்றும் பாடலாசிரியரான சினேகன், ‘மக்கள் நூலகத்தை’த் தொடங்க இருக்கிறார்.


 
‘பிக்பாஸ்’ புகழ் கவிஞர் சினேகன், மக்களுக்கான பெரிய நூலகம் திறக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய கனவு என தெரிவித்திருந்தார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால், பரிசுத்தொகையான 50 லட்சத்தைக் கொண்டு அந்த நூலகத்தை அமைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
ஆனால், அவர் அதில் ஜெயிக்கவில்லை. இருந்தாலும், அவருடைய கனவான மக்கள் நூலகத்தை அவர் அமைக்க இருக்கிறார். இதற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் 10 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். மேலும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் இருந்து நிதியுதவி வருவதாகவும் சினேகன் தெரிவித்துள்ளார்.
 
சினேகனின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் புதுக்கரியாப்பட்டி என்ற இடத்தில் இந்த நூலகம் அமைய இருக்கிறது. இதில், எல்லாவிதமான அரிய நூல்களும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என சினேகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments