Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காக்கா முட்டை அவதூறு வழக்கு - நேரில் ஆஜராக தனுஷுக்கு சம்மன்

காக்கா முட்டை அவதூறு வழக்கு - நேரில் ஆஜராக தனுஷுக்கு சம்மன்
, சனி, 27 ஜூன் 2015 (16:21 IST)
காக்கா முட்டை படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து அவதூறான வசனங்கள் உள்ளதாக, அகில இந்திய வழக்கறிஞர்கள் நலச்சங்க தலைவர் மணிவண்ணன் மனு தாக்கல் செய்திருந்தார்.


 

அந்த மனுவில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

நடிகர் தனுஷ் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து காக்கா முட்டை என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் வக்கீல் தொழிலை பற்றியும், வக்கீலை பற்றியும் அவதூறான வார்த்தைகளில் வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. எனவே, இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றிமாறன், இயக்குனர் மணிகண்டன், அவதூறு காட்சியில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தனுஷ், வெற்றிமாறன் உள்பட 4 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி அவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
 

Share this Story:

Follow Webdunia tamil