Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாலி ரீமேக் விவகாரம்… எஸ் ஜே சூர்யாவுக்கு எதிராக தீர்ப்பு!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (16:15 IST)
இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கிய வாலி படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

1999 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அஜித்துக்கு திருப்புமுனையாக அமைந்த படம் வாலி. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா இப்போது தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர். மற்றும் தென்னிந்திய மொழிகளில் வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குனராகவும் அறியப்படுகிறார்.

இந்நிலையில் வாலி படத்தை 22 ஆண்டுகள் கழித்து இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை பெற்றுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர், ஆனால் தன்னுடைய அனுமதி இல்லாமல் ரீமேக் செய்யக்கூடாது என்று வழக்கு தொடர்ந்திருந்தார் எஸ் ஜே சூர்யா. அந்த வழக்கில் ரீமேக் சம்மந்தப்பட்ட உரிமைகள் அனைத்தும் தயாரிப்பாளர் வசமே உள்ளதாகவும், அதனால் அவரிடம் இருந்து முறைப்படி உரிமை பெற்றுள்ள போனி கபூர் ரீமேக் செய்ய எந்த தடையும் இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி பவர் ஹவுசு.. எட்ரா கொக்கிய..! - கூலி திரை விமர்சனம்!

எனது பதவிகாலத்தில் 2800 நாய்களை கொண்டு புதைத்துள்ளேன்.. கர்நாடக எம்.எல்.சி சர்ச்சை பேச்சு..

நடிப்பு ஆசை காட்டி சிறுமி வன்கொடுமை! புல்லுக்கட்டு முத்தம்மா பட நடிகை கைது!

நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து! கைது செய்து சிறையிலடைக்க உத்தரவு! - உச்சநீதிமன்றம் அதிரடி!

முன்பு கவர்ச்சிக்கு ‘No’. ஆனா இப்போ ‘Yes’… தமன்னா சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments