Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியுடன் நடிக்க யாருக்குத்தான் பிடிக்காது? சிவராஜ்குமார்

Webdunia
ஞாயிறு, 19 ஜூன் 2022 (13:05 IST)
ரஜினியுடன் நடிக்க யாருக்குத்தான் பிடிக்காது? சிவராஜ்குமார்
ரஜினியுடன் நடிக்க யாருக்குதான் பிடிக்காது என கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘ஜெயிலர்’  திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சிவராஜ்குமார், ‘ரஜினி அவர்களுடன் நடிக்க யாருக்குதான் பிடிக்காது என்றும் நெல்சன் தன்னிடம் கூறியதாகவும் ஆனால் இந்த படத்தில் நான் நடிக்கிறேனா? இல்லையா?  என்பதை அதிகாரபூர்வமாக நெல்சன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் தான் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 
மேலும் என்னிடம் நெல்சன் கதை கூறியது உண்மைதான் என்றும் அந்த கதையை கேட்டு தான் ஆச்சரியம் அடைந்ததாகவும் சிவராஜ்குமார் அந்தப் பேட்டியில் கூறினார் சிவராஜ் குமாரின் தந்தை ராஜ்குமார் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் மிகச்சிறந்த நண்பர்கள் என்பதும் ரஜினியை ராஜ்குமாருக்கு சிறுவயதில் இருந்தே தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

அல்லு அர்ஜூன் படம் டிராப்.. அட்லி அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..!

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments