’ரஜினி 169’ படத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரா?- நெல்சன் போடும் தூண்டில்!

Webdunia
வியாழன், 5 மே 2022 (16:40 IST)
ரஜினியின் 169 படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

பீஸ்ட் படத்தின் ரிலீஸூக்குப் பிறகு அதன் இயக்குனர் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் தற்போது எழுந்தன. இதனால் அவர் அடுத்து இயக்கவுள்ள ரஜினி படத்தில் மாற்றங்கள் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி ரஜினியிடம் பேசியுள்ளதாகவும் இயக்குனரை மாற்றலாமா என அவரிடமே கேட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக ரஜினி காத்திருக்கும் நிலையில் தோல்விப் படம் தந்த நெல்சனையே இயக்க சொல்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நெல்சன் ரஜினி கூட்டணி உறுதியானது.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியோடு நடிக்கப் போகும் நடிகர்கள் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் பிரியங்கா மோகன், ஐஸ்வர்யா ராய் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான சிவராஜ் குமாரை நடிக்க வைக்க நெல்சன் ஆலோசித்து வருவதாகவும், மேலும் இது சம்மந்தமாக சிவராஜ் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments