Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் இணையும் சிவராஜ் குமார்!

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (10:59 IST)
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி மழைக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவராஜ் குமார் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments