Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகுமாரின் சபதம்: 5வது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:40 IST)
பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துவரும் திரைப்படம் சிவகுமாரின் சபதம். இந்த படத்தை அவரே தயாரித்து, இசையமைத்து, இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தில் மாதுரி என்பவர் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் விஜே பார்வதி உள்பட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே நான்கு பாடல்கள் வெளியாகி விட்ட நிலையில் ஐந்தாவது பாடலான  மிடில் கிளாஸ்டா  என்ற பாடல் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
ரோகேஷ் பாடல் வரிகளில் பாம்பா பாக்யா என்பவர் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது என்பதும் ஹிப்ஹாப் ஆதி நடித்த படங்களிலேயே இந்த படம்தான் அதிக பட்ஜெட் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments