Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவீரன் பட ரிலீஸின் போது சிவகார்த்திகேயனுக்குக் காத்திருக்கும் சிக்கல்!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (12:41 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதைப் படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.

படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி சுதந்திர தின விடுமுறையைக் கணக்கில் வைத்து ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நாளில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படமும் ரிலீஸ் ஆவதால் இப்போது ஜூலை 14 ஆம் தேதிக்கு முன் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஏற்கனவே தன்னுடைய கடன் பிரச்சனைகளில் சிக்கியுள்ள நிலையில் இந்த படம் ரிலீஸாகும் போது அவர் 33 கோடி ரூபாய் கட்டினால்தான் அவரால் அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments