Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ வசனம் முதலில் இல்லை .. கடைசி நேரத்தில் விஜய் சார்தான் மாற்றினார் –சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

vinoth
வியாழன், 21 நவம்பர் 2024 (10:09 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவான ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்று 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஆனால் அந்த காட்சியில் விஜய்யும் சிவகார்த்திகேயனும் பேசும் வசனத்தில் உள்ளர்த்தம் இருக்கும்படி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். படத்தின் க்ளைமேக்ஸில் வில்லனைக் கைது செய்து கட்டிப் போட்டுவிட்டு இவனை நீங்க பாத்துக்கோங்க. துப்பாக்கிய பிடிங்க சிவா.’ என சிவகாத்திகேயனிடம் சொல்வார் விஜய்.

அப்போது சிவகார்த்திகேயன் “உங்களுக்கு இதவிட ஏதோ ஒரு முக்கியமான வேல இருக்குன்னு போறீங்க… நீங்க போங்க நான் பாத்துக்குறேன்” என சொல்வார். இது விஜய் சினிமாவை விட்டு செல்வதால் இனிமேல் சிவகார்த்திகேயன் விஜய் இடத்தை நிரப்பப் போவதாக பேசுவது போலவும் எடுத்துக் கொள்ளலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து விவாதம் செய்தனர்.

இந்த காட்சி பற்றி இப்போது பேசியுள்ளார் சிவகார்த்திகேயன். அதில் “அந்த காட்சியில் அப்படி வசனமே இல்லை. முதல் நாள் என்னிடம் சீன் பேப்பர் கொடுக்கப்பட்ட போது “இதக் கவனமா பாத்துக்கோங்க.. சுடக்கூடாது” என்றுதான் வசனம் இருந்தது. ஆனால் காட்சியை எடுக்கும் போது விஜய் சார்தான்  “துப்பாக்கிய பிடிங்க சிவா” என மாற்றினார். அது எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது. இதை விஜய் சாரின் அன்பாகதான் பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments